தூத்துக்குடி - குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த சுந்தரேசவிஸ்வா என்பவர் தனது வீட்டில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார், இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் ஒவ்வொன்றாக காணாமல் போய் உள்ளது, இந்த நிலையில் வீட்டு அருகே உள்ள வலைப்பொறியில் 12 அடி நிலம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கோழிய முழுங்கியபடி சிக்கி இருந்தது, இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு துரை வீரர்கள் வலையில் சிக்கியிருந்த 12 அடி நிலம் கொண்ட மலைப்பாம்பை லாபகரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்,  பின்னர் பாதுகாப்பாக மலைப்பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.