ஒட்டப்பிடாரம் அருகே வளைவில்  கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான தனியார் பேருந்து?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வசந்த் நகர் 1வது தெரு புது கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் கார்த்திக் (26).இவர் கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லக்கூடிய தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பேருந்தில் திரவியம் மகன் கருப்பசாமி நடத்துனராக பணியாற்றி வருகிறார்.கார்த்திக் வழக்கம் போல தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டிக்கு பேருந்தை இயக்கி வந்துள்ளார்.பேருந்தில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.

இந்தநிலையில் ஒட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூர் செல்லும் சாலை வளைவில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரியின் மீது மோதாமல் இருக்க விலகிய போது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில்,பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு எந்த வித காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்து குறித்து  தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் காவல் நிலைய  போலீசார் விரைந்து சென்று பேருந்தில் இருந்தவர்களை அரசு பேருந்தில் மாற்றி தங்களுடைய கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த விபத்து குறித்து ஒட்டப்பிடாரம் காவல் நிலைய  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.