விளாத்திகுளம்
அருகே சாலையின் ஓரத்தில் நின்று கொண்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது - கார் மோதல்
- 1வயது குழந்தை உள்பட 5 பேர் காயம். சென்னை ஆவடியை
சேர்ந்த ராமர் மற்றும் அவரது உறவினர்கள் திருச்செந்தூர் முருகன் மற்றும்
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் வழிபாடு நடத்த சென்னையில் இருந்து காரில்
வந்துள்ளனர்.
காரை ராமர் ஓட்டி
வந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்
விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதுவென்றான் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது ,
கார் திடிரென
சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த
கண்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி அப்பளம் போல் நொறுக்கி விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டி வந்த ராமர்(50), காரில் பயணித்த சாமுண்டீஸ்வரி(40 ), கணேஷ்(26), இவரது மனைவி திவ்யா(24) மற்றும் இவர்களது 1வயது குழந்தை தர்ஷன் ஆகியோர் காயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் எப்போதும் வென்றான் போலீசார் விரைந்து சென்று
காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ராமர், சாமுண்டீஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால்
இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து எப்போதும்
வென்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி
கண்டெய்னர் லாரி மீது - கார் மோதல் - 1வயது குழந்தை உள்பட 5 பேர் காயம்.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
போதைப்பொருள் மற்றும் கடத்தல் இல்லாத மாவட்டமாக மாற்றப்படும் - ஆட்சியர் லட்சுமிபதி பேட்டி!
அடுத்த
பலிக்கு பலியாக இளைஞர் தலை துண்டித்து வெட்டி படுகொலை.
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026