தூத்துக்குடி : எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையில், அதிகாரிகள் செய்த தரமான சம்பவம்: பேஸ்மெண்ட் இல்லாத மின்கம்பத்திற்கு 3 கல்லை அண்டக்குடுத்து அசத்தியுள்ளனர்!

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், எட்டையபுரம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெயர்ந்து விழுந்த மின் விளக்குடன் கூடிய மின் கம்பத்தை கண்டு கொள்ளாமல் இருந்த அதிகாரிகள், அதனை முறையாக சரிசெய்து சிமெண்ட் - காண்கீரிட் கொண்டு நட்டு வைக்காமல், தற்போது ஏதோ வேலை செய்துள்ளோம் என்ற பெயருக்கு கீழே விழுந்து கிடந்த மின்விளக்குடன் கூடிய மின் கம்பத்தை தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் வைத்து 3 கல் மற்றும் சாக்கு மூட்டைகளை அண்டக்குடுத்து வைத்து பெரும் அலட்சியமாக செயல்பட்டுள்ளனர் துறைசார் அதிகாரிகள்....

தற்போது அநேக இடங்களில் ஆடி காற்று வீசி வரும் சூழ்நிலையில், முறையாக மின்கம்பத்தை நட்டு வைக்காமல் அதிகாரிகள் செய்த இந்த அலட்சியத்தால் மின் கம்பம் சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் சூழல் நிலவி வருகிறது.

ஏற்கனவே, இந்த எட்டையபுரம் தேசிய நெடுஞ்சாலையானது அரசின் முறையான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக சரியில்லாத காரணத்தால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வரும் அசாதாரண நிலையில், தற்போது அதிகாரிகள் தங்களது பங்கு என்பதைப்போல, சாலையின் நடுவில் அலட்சியமாக கல்லை அண்டக்குடுத்து மின் ஒயர்கள் செல்லும் மின் கம்பத்தை ஆபத்தான வகையில் வைத்திருப்பது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தையும், அலட்சியமாக இருந்து வரும் அதிகாரிகள் மீது வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது....