"இப்ப காலம் ரொம்ப மோசமா கெட்டுப்போயிருக்குது.... ஆண், பெண் ,பசங்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்" - கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வில்லுமரத்துப்பட்டி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கிராம மக்களிடம் கலந்துரையாடினார். பின்னர் வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.தமிழக முழுவதும் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வில்வமரத்துப்பட்டி கிராமத்தில், தமிழக சமூக நலன் மற்றும் அவர்கள் துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பல்வேறு துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர். இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கீதா ஜீவன் பொதுமக்களிடம் பேசிய போது,• இப்ப காலம் ரொம்ப மோசமா கெட்டுப்போயிருக்குது.... ஆண், பெண் பசங்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்...18 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தங்களது துறை சார்பாக வேண்டுகோள் விடுத்தார். • அதுமட்டுமின்றி, பெண்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.• ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத தகுதியுடையவர்கள் அக்.18-ம் தேதிக்குள் மீண்டும் மேல்முறையீடு செய்து பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் வேளாண்மை துறை, சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு மக்களுக்கு தங்களின் துறைகள் மூலமாக வழங்கப்படும் சேவைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. பின்னர் அங்கு காட்சிப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த தானியங்கள், விதைகள், பழங்கள், விவசாய பொருட்கள், இயற்கை உணவுகள் அடங்கிய கண்காட்சியை கண்டு ரசித்து பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என கூறினார்.
தமிழ்நாடு
"இப்ப காலம் ரொம்ப மோசமா கெட்டுப்போயிருக்குது.... ஆண், பெண் ,பசங்களை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்"அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்!
Admin
1 நிமிட வாசிப்பு