ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முஷ்டக்குறிச்சி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீஇருளாகி அம்மன் ஸ்ரீ கருப்பசாமி ஆலய பரிபார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.முன்னதாக யாகசாலை பூஜை மகா கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நவக்கிரக ஹோமம்கோ இரண்டாம் கால பூஜைப. பூரணாகுதி தீபாரணை நடைபெற்றது,
அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசை வாத்தியங்களுடன் கடம்ப புறப்பாடு ஆலயம் வலம் சென்று விமான கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இருளாகி அம்மன் கருப்பசாமிக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் பன்னீர் விபூதி பஞ்சாமிர்தம் மஞ்சள் 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது. பக்தர்கள் பலர் கலந்து கொண்டு அருள் ஆசி பெற்று சென்றனர் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு
கமுதி அருகே முஷ்டகுறிச்சி இருளாயி அம்மன் கும்பாபிஷேக விழா!
Admin
1 நிமிட வாசிப்பு