கடலாடி புரசங்குளம்
கிராமத்தில் கோலாகலமாக நடைபெற்ற குலசை முத்தாரம்மன் தசரா இரண்டாம் ஆண்டு விழா! ராமநாதபுரம்
மாவட்டம் கடலாடி புரசங்குளம் கிராமத்தில் குலசை அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் சமேத
முத்தாரம்மன் கோவில் தசரா விழாவை முன்னிட்டு, இரண்டாம் ஆண்டு
ஸ்ரீ மாகாளி பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து முத்தாரம்மன் ஆலயத்திலிருந்து காளி பக்தர்கள்
பல்வேறு வேடங்கள் அணிந்து கொட்டு மேளம் இசை வாத்தியங்களுடன் பல்வேறு கிராம
நகரங்களுக்கு சென்று தர்மம் காணிக்கை
பெற்று சென்றனர் .முன்னதாக
குலசேகரப்பட்டினத்தில் தீர்த்தமாடி குலசை ஞானமுத்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன்
ஆலயத்தில் இருந்து கும்பம் எடுத்து வந்து கடலாடி மங்கள விநாயகர் ஆலயத்தில் இருந்து
கும்ப வீதி உலா சென்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
தமிழ்நாடு
கோலாகலமாக நடைபெற்ற குலசை முத்தாரம்மன் தசரா இரண்டாம் ஆண்டு விழா!
Admin
1 நிமிட வாசிப்பு