விளாத்திகுளம் பகுதியில் கடும் பனிப்பொழிவு: மெதுவாக ஊர்ந்து செல்லும் வாகனங்கள்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் அதிகாலையில் கடந்த சில நாட்களாகவே அதிகளவில் குளிரும், நண்பகலில் அளவிற்கு அதிகமான வெயிலும் இருந்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதலே விளாத்திகுளம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் கடும் பனிப்பொழிவுடன் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் முன்னே செல்லக்கூடிய வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, வழக்கத்தை விட கடும் பனிப்பொழிவு காரணமாக தினசரி நடைபயிற்சி செல்பவர்களும் குளிரால் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்...

அதிலும் குறிப்பாக.... தை அமாவாசை தினமான இன்று விளாத்திகுளம் அருகே உள்ள சிப்பிக்குளம் தீர்த்தக்கரையில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து புனித நீராடுவது வழக்கம்...

ஆனால் கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் காரணமாக வழக்கத்தைவிட தாமதமாக செல்லக்கூடிய ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது