தூத்துக்குடியில் 7½ மணி நேரம் தண்ணீரில் மிதந்து குளோபல் வேர்ல்டு ரெகார்டு சாதனை நிகழ்த்திய தூத்துக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவனுக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டு!
நேற்று (12.06.2023) தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கேம்ஸ் வில்லே ஸ்போர்ட்ஸ் அகாடமி நீச்சல் குளத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த 9 வயது பள்ளி மாணவர் ஹர்சன் என்பவர் தொடர்ந்து 7 மணி 30 நிமிடம் 2 வினாடிகள் தண்ணீரில் மிதந்து குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை நிகழ்த்தினார்.
மேற்படி தண்ணீரில் மிதந்து உலக சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவர் ஹர்சன் இன்று (13.06.2023) மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சாதனை நிகழ்த்திய மாணவரை பாராட்டி மென்மேலும் வெற்றிகள் பெற வாழ்த்தினார்.
இந்நிகழ்வின் போது கேம்ஸ் வில்லே ஸ்போர்ட்ஸ் அகாடெமி பயிற்சியாளர் புஷ்பராஜ் மற்றும் சாதனை படைத்த மாணவரின் பெற்றோர் உடனிருந்தனர்.