சர்ச்சை வீடியோவில் சிக்கி விளாத்திகுளத்தை பரபரப்பாகிய முதல்நிலை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் - எஸ்.பி. அதிரடி!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் டிஎஸ்பி அலுவலகத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த இராஜேந்திரன் இளம் பெண் ஒருவருடன் தனிமையில் இருந்த போது மர்ம நபர்கள் எடுத்த வீடியோ வைரலாக பரவிய நிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் தற்போது காவலர் ராஜேந்திரனை ஆயுத படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேலும் விளாத்திகுளம் உட்கோட்டத்தில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர் என தொடர்ச்சியாக ஆயுதப்படைக்கு மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படுவது காவல்துறை வட்டாரங்கள் மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் பேசும் பொருளாகியுள்ளது...