நம்ம படம் எல்லோரும் பாருங்கள்- கோவில்பட்டி எனக்கு சொந்த வீடு போன்றது - கோவில்பட்டியில் திரையரங்கில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய காதர் பாட்ஷா (எ)முத்துராமலிங்கம் திரைப்பட நாயகி நடிகை சித்தி இத்னானி பேச்சு!
காதர் பாட்ஷா (எ)முத்துராமலிங்கம் நம்ம படம், எல்லோரும் திரையரங்கில் பாருங்கள், கோவில்பட்டி எனக்கு சொந்த வீடு போன்றது, இந்த திரைப்பட படப்பிடிப்பின் போது கோவில்பட்டி மக்கள் என்னை அவங்க சொந்த வீட்டு பெண்ணாக பார்த்துக் கொண்டனர் என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா திரையரங்கில் நடிகை சித்தி இத்னானி ரசிகர்களுடன் கலந்துரையாடிய பின்னர் பேசிய போது தெரிவித்துள்ளார்.
தமிழக முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த 2ந்தேதி இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பிரபு பாக்கியராஜ் நடிகை சித்தி இத்னானி, உள்ளிட்டோர் நடித்த காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த திரைப்படம் முழுவதும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் காதர் பாட்ஷா (எ)முத்துராமலிங்கம் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் சத்தியபாமா சினிமாஸ் திரையரங்கிற்கு திடீரென வருகை தந்த நடிகை சித்தி இத்னானி அங்கிருந்த ரசிகர்களிடம் கலந்துரையடினார்.
அப்போது நடிகை சித்தி இத்னானி பேசுகையில் இந்தப் படத்திற்காக மூன்று மாதம் கோவில்பட்டியில் தங்கியிருந்தாகவும், கோவில்பட்டி மக்களுடன் நல்ல நட்பு இருப்பதாகவும், கோவில்பட்டி என்னுடைய வீடு போன்ற உணர்வு இருக்கிறது. கோவில்பட்டி மக்கள் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணாங்க, அவங்க வீட்டு பொண்ணு மாதிரி என்ன பாத்துக்கிட்டாங்க, கோவில்பட்டி மக்கள் தனக்கு ரொம்ப பிடிக்கும் எனவும், இது உங்களுடைய படம், உங்கள் நண்பர்கள் குடும்பத்தினரிடம் சொல்லி திரையரங்குகளில் பார்க்கச் சொல்லுங்கள் , ரொம்ப ரொம்ப அனைவருக்கும் நன்றி, இது நம்ம படம், உங்களுடன் பேசியது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது என்றார்
பின்பு திரையரங்கில் இருந்த ரசிகர்கள் பொதுமக்களிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டு அங்கிருந்து நடிகை சித்தி இத்னானி சென்றார்