விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு பால், தயிர்,சந்தனம், பன்னீர், இளநீர், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து செவ்வரளி, மல்லிகை உள்ளிட்ட மலர்களால் நன்கு அலங்கரிக்கப்பட்ட நந்தி பகவானுக்கு பஞ்சமுக தீபாதாரணை நடைபெற்றது. வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்
வெகு விமர்சையாக நடைபெற்ற வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது: தப்பிக்கும் போது விபத்தில் கை முறிவு!
அடுத்த
மாநில அளவிலான சிலம்பப் போட்டி : 600-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்பு!
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025