தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி கைது: தப்பிக்கும் போது விபத்தில் கை முறிவு!

தூத்துக்குடி குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த ஜெயதுரை என்பவரின் மகன் மாரிக்குமார் (33) , தூத்துக்குடியில் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18-05-2024 அன்று தூத்துக்குடி பீங்கான் ஜங்ஷன் அருகில் சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், மாரிக்குமாரை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த பணத்தைப் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து மாரிக்குமார் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில். தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த காத்தான் என்ற கார்லின்(24) என்பவனும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனை அடுத்து காத்தன் என்ற கார்லினை கைது செய்து அவரிடமிருந்த ரொக்க பணம்  ரூ.3160 பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து வழிப்பறியில் ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற போது சாலை வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது, மேலும் தென்பக காவல் நிலைய போலீசார்  புகார் அளித்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.