கமுதி அருகே வள்ளி தேவசேன  சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண வைபவம்  பொன்னூஞ்சல் தாலாட்டு!   ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேன சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழாவை முன்னிட்டு  சாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் பொன்னூஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.  இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டு கொடியேற்றத்துடன் துவங்கிய கந்தசஷ்டி சூரசம்கார பெருவிழாவை முன்னிட்டு  நாள்தோறும் வள்ளி தேவசேன சுப்பிரமணியசுவாமிகளுக்கு சிறப்பு அபிஷே அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக 19-11-2023 ஞாயிற்றுக்கிழமை  ஸ்ரீவள்ளிதேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் சாமிக்கு பொன்னூஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து வள்ளி சமேத சுப்பிரமணிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. அலங்காரத்தில் காட்சியளித்த  சுவாமியிடம் பக்தர்களுக்கு அருள் ஆசி பெற்று சென்றனர், நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.