கமுதியில் அருகே
பாரம்பரிய முறையில் 1001
தீப்பந்தங்களுடன் மேளதாளங்கள் வானவேடிக்கைகள் முழங்க முத்தாலம்மன் மின் ஒலி
அலங்காரத்தில் கிராம மக்கள் கோலாகல ஊர்வலம்! ராமநாதபுரம்
மாவட்டம் கமுதி அருகே நாராயணபுரம்
கல்லுப்பட்டி கிராம மக்கள் சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் ஐப்பசி மாத முத்தாலம்மன் பொங்கல் விழா கடந்த
வாரம் காப்பு கட்டு கொடியேற்றத்துடன் விழா துவங்கிய திருவிழாவை முன்னிட்டு சுடும்
மண்ணில்வடிவமைக்கப்பட்ட முத்தாலம்மன்சுவாமி சிலைக்கு மின் ஒலி அலங்காரத்தில்
மேளதாளம் வான வேடிக்கை இசை வாத்தியங்களுடன் ஆட்டம் யாட்டத்துடன்
கோலாகலமாக கல்லுப்பட்டி நாராயணபுரம் கிராம மக்கள் 1001 தீபந்தங்களுடன் பாரம்பரிய முறையில் அம்மன்
தவழும் பிள்ளை சுவாமிகளை பக்தர்கள் தங்களது
தலையில் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
கமுதி
கண்ணார்பட்டியில் இருந்து கமுதி பேரூராட்சி அலுவலகம் பேருந்து நிலையம் வழியாக மதுரை- அருப்புக்கோட்டை சாலையைக் கடந்து சுவாமிகளின் சிலைகளை ஊர்வலமாக கல்லுப்பட்டி
நாராயணபுரம் கிராமத்திற்கு கொண்டு
செல்லப்பட்டது, அதன் பின்னர்
சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது, ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இதில் கலந்து
கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்
மின் ஒலி அலங்காரத்தில் வீதி உலா வந்த முத்தாலம்மன்!
Admin
1 நிமிட வாசிப்பு