விளாத்திகுளத்தில், அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் திருக்கோவிலில் "மஹா கும்பாபிஷேக விழா" வெகு சிறப்பாக நடைபெற்றது!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ராஜீவ் நகரில், அமைந்துள்ள "அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன், மாரியம்மன் திருக்கோவிலில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவிலில் "ஜூர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவானது திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 6 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேகமானது,

விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், அம்பாள் ரக்ஷா பந்தனம், யாகசாலை பூஜை, ஸ்பரிசாகுதி, திரவியாகுதி, வஸ்த்ராகுதி, மஹா பூர்ணாகுதி, யாத்ரா தானம் என பகுதி பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் காலை 9.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை விமான கலசங்களுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகமானது வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீ பேச்சியம்மன், மாரியம்மன், மாடசாமி மற்றும் வலம்புரி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், பால், திருநீறு என பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு மஹா ளதீபாராதனை காட்டப்பட்டது.

இதில் விளாத்திகுளம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து கோவிலில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் உணவருந்திச் சென்றனர்.