கமுதி அருகே சூரனை வதம் செய்த சுப்பிரமணியர்... விண்ணைப் பிளந்த அரோகரா கோசம்! வள்ளி தேவசேன  சமேத சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கந்தசஷ்டி சூரசம்கார பெருவிழா பக்தர்கள் பரவசம் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்!  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி கரிசல்குளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேன சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா நடைபெற்றது.கடந்த 13ஆம் தேதி காப்பு கட்டு கொடியேற்றத்துடன் துவங்கிய கந்தசஷ்டி சூரசம்கார பெருவிழாவை முன்னிட்டு  நாள்தோறும் வள்ளி தேவசேன சுப்பிரமணியசுவாமிகளுக்கு சிறப்பு அபிஷே அலங்காரம் திவானை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக 18-11-2023 நேற்று  கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலம் சென்று பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க சூரசம்கார பெருவிழா நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து வள்ளி சமேத சுப்பிரமணிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமியிடம் பக்தர்களுக்கு அருள் ஆசி பெற்று சென்றனர். நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.