தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள N. சுப்பையாபுரம் (எ) நரிப்பட்டி கிராமத்தில் புதிதாக பிரதிஷி செய்யப்பட்டுள்ள ஸ்ரீ வாராஹி அம்மன் கோவிலில்,  தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால், தயிர், நெய்,தேன் மஞ்சள்,இளநீர், மஞ்சள், சந்தனம்  உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாதாரணை நடைபெற்றது. வாராஹி அம்மனை மதுரை,ராமநாதபுரம், சிவகங்கை,தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அம்மனுக்கு தேங்காய் அரிசியால் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.