ஜமீன் கோடங்கிபட்டி கிராமத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.இந்திய
சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழர் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்படும் வ.உசிதம்பரம் பிள்ளை அவர்களின் 152 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரால் கொண்டாடப்பட்டு
வருகிறது.
இதன் ஒரு பகுதியாக
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் கோடாங்கிபட்டி கிராமத்தில் கிராம மக்கள் சார்பாக வ உ சிதம்பரனாரின்
திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பள்ளி மாணவ
மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பேனா,பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்பட்டது. நிகழ்வில் கிராம
பொதுமக்கள் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்தியா
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாள் விழா!
Admin
1 நிமிட வாசிப்பு