தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே எட்டயபுரத்தில் திருகார்த்திகை அகல்விளக்கு திருவிழாவினை
முன்னிட்டு சரவண பொய்கை கார்த்திகை தீபம் வழிபாட்டு மன்றம் சார்பில் எட்டயபுரம்
தெப்பக்குளத்தில் உலக மக்கள் நன்மை வேண்டி 5004 அகல்விளக்கு ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்யப்பட்டு இருந்தது. இதனை முன்னிட்டு இன்று இரவு தெப்பக்குளத்தின்
முன்பகுதியில் கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ண பகவானுக்கு 18வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்
நடைபெற்றது. இதனை தொடர்ந்து தெப்பக்குளத்தில் மலர் தூவப்பட்டு சிறப்பு பூஜைகள்
செய்யப்பட்டது.
இதன் பின்னர் தெப்பக்குளத்தின் 8 படித்துறைகள் மற்றும் சுற்றுசுவர்களில் 5004 அகல்விளக்குகள் ஏற்றபட்டன. இதில்
எட்டயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு தீபம்
ஏற்றி வழிபட்டனர். இதையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு மற்றும்
மீட்பு பணிகள் துறையின் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான கோவில்பட்டி
தீயணைப்புத்துறை வீரர்கள் தெப்பக்குளம் பகுதியை சுற்றிலும் நின்று கொண்டு
பாதுகாப்பில் ஈடுபட்டதோடு தெப்பக்குளத்தின் கரையோரங்களில் மீட்பு படகுகள் மூலம்
ரோந்து பணியில் ஈடுபட்டனர்... மேலும் அங்கு
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் காவலர்களும் தீபம் ஏற்றி திருக்கார்த்திகையை கொண்டாடினர்.
ஆன்மிகம்
5004 அகல்விளக்குகள் ஏற்றி சிறப்பு வழிபாடு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பூசனூர் பூஞ்சிட்டு பந்தயம் முதல் சுற்று!
அடுத்த
முத்துமாரியம்மன் கோவிலில் திரு கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை!
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025