தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு விளாத்திகுளத்தில், சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள சுவாமி ஐயப்பன் சன்னதியில், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் நாள் அன்றும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி சித்திரை மாதத்தின் முதல் நாள் மற்றும் தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு இன்று சுவாமி ஐயப்பனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு,பல்வேறு பழங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச தீபாரதனை காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமிக்கு பூ, மாலை, பழங்கள் உள்ளிட்டவற்றை படைத்து சிறப்பு பூஜையைக் கண்குளிரக் கண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் வழங்கப்பட்ட அருட்பிரசாதத்தைப் பெற்றுச்சென்றனர்.