சாயல்குடி அருகே ஸ்ரீ பவளநிற வல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவேந்தியநாதர் திருக்கோவில் சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்! 


ராமநாதபுரம் சாயல்குடி அருகே மாரியூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பவள நிறைவல்லி அம்பாள் சமேத பூவேந்திய நாதர் கோவில் சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் 57 வது படலம் வங்கக் கடல் சமுத்திரத்தில் திருவிளையாடல் புராண வைபவம் விமர்சியாக நடைபெற்றது,அதனைத் தொடர்ந்து பவள நிற வல்லி அம்மாள் சமேத பூவேந்தே நாதர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.  


முன்னதாக பவல நிற வல்லி அம்மாள் சமேத பூவேந்தியநாதர் உற்சவர் சுவாமிகள் மங்கல இசை வாத்தியங்களுடன் ஆலயத்திலிருந்து புறப்பாடாக பக்தர்கள் புடை சூழ கடற்கரைக்கு சென்றனர். 


இதில் கடலாடி,சாயல்குடி,மாரியூர்,மந்தல்,கமுதி,சிக்கல்,வாலிநோக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.