முதுகுளத்தூர்
அருகே வறட்சி நீங்கி விவசாய பணிகளுக்கு மழை பெய்ய வேண்டி கடந்தாண்டு விளைந்த
தானியங்களை காய்ச்சி பனை ஓலையில் பிரசாதம் வினியோகம் பெண்கள் கும்மியாட்டம் நடனம்
ஆடி வழிபாடு!
ராமநாதபுரம் மாவட்டம்
முதுகுளத்தூர் அருகே பொசுகுடிப்பட்டி கிராமத்தில் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக
பாரம்பரிய முறைப்படிகடந்தாண்டு தங்களது வயல்களில் விளைந்தநெல்,கேழ்வரகு,சாமை,குதிரைவாலி,கம்பு ,சோளம்உள்ளிட்ட
தானியங்களை வீடு வீடாக சென்று சேகரித்து கூல் சமைத்து பக்தர்களுக்கு
பாரம்பரிய முறைப்படி பனை ஓலையில் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
முன்னதாக பெண்கள்
கும்மியாட்டம் நடனமாடி மேளதாளங்கள் வானவேடிக்கை ஆட்டம் பாட்டங்களுடன் ஊர்வலமாக
கிராமத்தில் நகர்வலம் காளி கோயில்சிறப்பு பூஜை செய்து அய்யனார் ஆலயத்திற்கு
வந்தடைந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைக்கு நடைபெற்றது.