ஆயிரம் கண்ணுடையாள் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழா பால்குடம் அக்னி சட்டி அழகுவேல் பக்தர்கள் நேத்திக்கடன்! ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பொதிகுளம் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு  ஆயிரம் கண்ணுடையாள் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முளைக்கொட்டு திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்து செல்லும் அக்கினி சட்டி அழகுவேல் எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.முன்னதாக கிராமத்தின் விநாயகர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் வான வேடிக்கை உறுமி மேளம் தப்பாட்டங்களுடன் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலம் சென்று ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் வலம் சென்று பக்தர்கள் பால்குடம் அக்னிசட்டி அழகுவேல் எடுத்து  தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர் அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் சிறப்பு அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது.