தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோட்டநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற"அருள்மிகு ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்மன் திருக்கோவிலில் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று கோவிலில் "நூதன ஆலய புனர்ருத்ரோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழாவானது திரளான பக்தர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை 6 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேகமானது, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, சோமகும்ப பூஜை, கும்ப பூஜை, புண்யாக வாஜனம், பிம்ப ரக்ஷ்சா பந்தனம், அம்பாளுக்கு காப்பு கட்டுதல், ஜெபங்கள், பாராயணம், ஸுக்தாதிகள் பாராயணம், விஷேச மூலிகை திரவிய ஹோமங்கள், ஷன்னவதி ஹோமங்கள், பிம்பாகுதி, ஸ்பரிஷாகுதி, பூர்ணாகுதி, கஜ பூஜை என பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் காலை 9.10 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனித நீரை விமான கலசங்களுக்கு ஊற்றி மஹா கும்பாபிஷேகமானது வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து மூலவர் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி மற்றும் ஸ்ரீ ராக்காயி அம்பிகைக்கும் மஞ்சள், சந்தனம், பால், திருநீறு என பல வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து கோவிலில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் உணவருந்திச் சென்றனர்.
ஆன்மிகம்
"புகழ்பெற்ற கோட்டநத்தம் 18-ம் படி கருப்பசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா" - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவை கிங்ஸ் விளம்பர தூதுவரும் நடிகருமான சதீஷ் தூத்துக்குடியில் பேட்டி!
அடுத்த
கமுதி அருகே முஷ்டகுறிச்சி இருளாயி அம்மன் கும்பாபிஷேக விழா!
இதையும் படிக்கலாம்
பொது மக்களை மரியாதை இன்றி நடத்தும் எட்டையபுரம் சார்பதிவாளரை கண்டித்து சிபிஎம் கண்டண ஆர்ப்பாட்டம்!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் எருது கட்டு விடும் விழா!
09 Jul 2026
விளாத்திகுளம் அருகே வீட்டில் படுத்திருந்த பெண் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை : 15 பவுன் தங்க நகை மாயம்!
07 Jul 2026
பெண்களை கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தி வரும் சிஎஸ்ஐ தூய ஆலய குருவானவர்!
28 Jun 2026