விளாத்திகுளத்தில், விமர்சையாக நடைபெற்ற "சனிப்பிரதோஷ வழிபாடு" : ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து செல்வர். அதிலும் பிரதோஷம் போன்ற முக்கிய தினங்களில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், சனிப்பிரதோஷமும் - சிவராத்திரியும் ஒன்றாக வருவதையொட்டி சிவ ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற
"மஹா சனிப்பிரதோஷத்தில்," நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பலவகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, எலுமிச்சை, தாமரைப்பூ, அருகம்புல், மாவிலை, எருக்கம் பூ, மஞ்சள், வில்வ இலை, உள்ளிட்ட பல வகையான மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டப்பின் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.