கமுதி அருகே சந்தன மாரியம்மன் வைகாசி பொங்கல் உற்சவ விழா-அம்மனுக்கு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடஊர்வல பாலாபிஷேகம்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா கடந்த ஆறாம் தேதி கொடியேற்றம் அம்பாள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 7 நாள் விழா துவங்கியது,நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.

இன்று கிராமத்தின் சக்தி விநாயகர் ஆலயத்தில் வான வேடிக்கை பட்டாசு வெடித்து மேல தாள இசை வாத்தியங்களுடன் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால் குடங்களுடன் ராமசாமிபட்டி கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலம் சந்தன மாரியம்மன் ஆலயம் வலம் சென்று அம்மனுக்கு சந்தன மஞ்சள்,பஞ்சாமிர்தம், மூலிகை திரவியம் அபிஷேகங்கள் பாலாபிஷேகம் அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.

இதில் கமுதி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து, கோவிலில் வழங்கப்பட்ட அருள் பிரசாதத்தை பெற்றுச் சென்றனர்.