விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ,புரட்டாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு மஞ்சள்,பால், தயிர், இளநீர்,தேன், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  பல்வேறு மலர்களால் மாலை அணிவித்து  சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மீனாட்சிசுந்தரேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு பஞ்சமுக தீபாதாரணை கட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.