கோவில்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி செவ்வாய் முன்னிட்டு இன்று சிறப்பு பூஜைகள்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாவது செவ்வாய்க்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள்  சாமி தரிசனம். ஆண்டுதோறும் ஆடி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்   சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு  தீபாரதனை காண்பிக்கப்பட்டது.இந்த ஆடி இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.