ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஏ.புனவாசல் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ ஏகநாதர் கோவில் புரவி எடுப்பு விழா விமர்சையாக நடைபெற்றது.இந்த புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு 48 நாட்களுக்கு முன்பு பிடி மண் கொடுத்து தவழும் பிள்ளை, அய்யனார், விநாயகர், பேச்சி அம்மன், மாரியம்மன், குதிரைகள், காளைகள் உருவம் பொறித்த சிலைகளை கிராம மக்கள் தயார் செய்தனர்.
பின்னர் காப்பு கட்டி விரதம் இருந்து ஏ.புனவாசல் கிராம மக்கள் தயார் செய்யப்பட்ட குதிரைகள், காளைகள், தவழும் பிள்ளை உள்ளிட்ட சிற்பங்களுக்கு வண்ணம் தீட்டி அலங்காரம் செய்து மேளதாளங்கள் இசை வாத்தியங்கள் வான வேடிக்கையுடன் கமுதி அருகே உள்ள காத்தனேந்தல் கிராமத்தில் இருந்து கடலாடி வழியாக முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனவாசல் கிராமத்திற்கு வந்து அய்யனார் கோவில் சென்று பக்தர்கள் கிராமத்தில் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றனர்.முன்னதாக அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், திரவியபொடி, விபூதி, உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைப்பெற்றது.
இந்த திருவிழாவை காண புனவாசல் கடலாடி சாயல்குடி முதுகுளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ கருப்புசாமி ஸ்ரீ ஏகநாதர் சுவாமிகளை தரிசித்து அருள் ஆசி பெற்று சென்றனர்.
ஆன்மிகம்
கடலாடி அருகே புரவி எடுப்பு விழா -ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!
Admin
1 நிமிட வாசிப்பு