ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் உலக அமைதி நன்மைகள் நிலவ வேண்டி 1008 பெண்கள் அக்னி சட்டி கஞ்சி கலைய ஊர்வலம் நடைபெற்றது. கமுதி குண்டாறு கரையோரத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்திலிருந்து கஞ்சி கலைய  ஊர்வலம் புறப்பாடு சென்று,பேருந்து நிலையம் பேரூராட்சி அலுவலகம் கண்ணார்பட்டி மதுரை அருப்புக்கோட்டை சாலையின் வழியாக ஊர்வலமாக சென்ற பெண்கள் மீண்டும் வழிபாடு மன்றம் வந்தடைந்தது.அதன் பின்னர் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் நடைபெற்று அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.