ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சிறுகுடி பெருங்கருணை கிராமத்தில் அமைந்துள்ள,அருள்மிகு ஸ்ரீ அங்கயர்கன்னி சமேத ஸ்ரீ அகிலாண்ட ஈஸ்வர் ஆலய முதலாம் ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது.முன்னதாக யாகசாலை பூஜை மஹா கணபதி ஹோமம் கோமாதா பூஜை மஹா பூரணாகுதி தீபாதாரணை நடைபெற்று.சிவாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க திருதில்லை கைலாய சிவ வாத்திய குழு மேளம் இசைத்து அலங்கார கும்ப நீர் ஆலயம் வலம் சென்று சாமிகளுக்கு பால், ,தயிர்,சந்தனம்,மஞ்சள்,பன்னீர்,விபூதி,பஞ்சாமிர்தம்,இளநீர்,கும்பநீர் அபிஷேகம் உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர், அனைவருக்கும் அன்னதானம் பிரசாத வழங்கப்பட்டது.