நாகலாபுரம்"அருள்மிகு ஸ்ரீ பூபால அய்யனார் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா" சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பூபால அய்யனார் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா இன்று ஏராளமான பொதுமக்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலை 7மணி அளவில் பிள்ளையார் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலமாக வந்து பூபால அய்யனாருக்க அபிஷேகம் நடைபெற்றது,அதற்கு முன்னதாக இத்திருக்கோவிலில் அதிகாலை 6.30 மணியளவில் மங்கள இசையுடன் தொடங்கிய குடமுழுக்கு விழாவானது, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நாடி சந்தனம், ஸ்பர்ஸி ஹீதி, மூர்த்தி ரக்ஷபந்தனம், நயோனோ நிமித்தம், நாமகாரணம்,மஹா பூர்ணாஹீதி, வேதிகா அர்ச்சனை,யாத்ரா தானம், யாக சாலை ப்ரவேஷம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் ஸ்ரீ பூபால அய்யனார், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு கோவில் குடமுழுக்கு விழாவானது வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பால், இளநீர், மஞ்சள், குங்குமம், திருநீறு, தயிர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த மஹா கும்பாபிஷேக விழாவில் நாகலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து கோவிலில் நடைபெற்ற அறுசுவை அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவருந்திச் சென்றனர்.