கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் - தங்க செயின், தங்க மோதிரம், வெள்ளி சாட்டை கம்பை பரிசாக தட்டிச் சென்ற மாட்டு வண்டிகள் !முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் திமுக சார்பில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை போட்டிக்கு ஏற்பாடு  செய்யப்பட்டு இருந்தது.பூஞ்சிட்டு, சின்ன மாடு என்று 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.

இதில் 16 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் 10 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.அதே போன்று 10கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் 22மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன‌.போட்டிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறி பாய்ந்து சென்ற காளைகளை சாலையின் இருபுறங்களிலும் இருந்து மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் முதலிடம் பெற்ற மாட்டு வண்டிக்கு 2 பவுன் தங்க செயின் வெள்ளிச்சாட்டை கம்பும் , 2வது இடம் பிடித்த மாட்டு வண்டிக்கு 1.5 பவுன் தங்கச் செயின், பெற்றது. 3வது இடத்தை பிடித்த மாட்டு வண்டிக்கு ஒரு பவுன் தங்கச் செயின் பரிசாக வழங்கப்பட்டது ,சிறிய மாட்டு வண்டி போட்டியில் ,முதலிடம் பிடித்த மாட்டு வண்டிக்கு 1பவுன் தங்க செயினும் வெள்ளிசட்டைக்கம்பும், இரண்டாவது பரிசு 3/4பவுன் தங்க செயினும், மூன்றாவது பரிசாக 1/2பவன்தங்க செயினும் வழங்கப்பட்டது ,முதல் கொடி வாங்கும் சாரதிக்கு 2 கிராம் தங்க மோதிரமும் பரிசாக வழங்கப்பட்டது