தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வளங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உஷா தலைமையில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (BLO) மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்களுக்கு வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் வட்டாட்சிய இராமகிருஷ்ணன், எட்டயபுரம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் இவர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா, தேர்தல் துணை வட்டாட்சியர்கள் பாலமுருகன், சண்முகவேல் மற்றும் ஏராளமான வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் 12D விண்ணப்பம் வழங்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தேர்தல் நிலைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, தேர்தல் நாளன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
News
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மது போதையில் தகராறு ஈடுபட்டவர் கைது.
அடுத்த
விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை எம்எல்ஏ மார்க்கண்டேயன் நலம் விசாரித்தார்.
இதையும் படிக்கலாம்
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026
மகாலட்சுமியை மனதார நினைத்து 108 மந்திரங்களை கூறி வழிபாடு நடத்திய ஏராளமான பெண்கள்!
18 Sep 2026