"Digital Crop Survey" -எனும் டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கெடுப்பு செய்யும் பணியை புறக்கணித்து தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று மாநில அளவில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலைமையிலும், வட்டத் தலைவர் வினோத், வட்டச் செயலாளர் செல்வகுமார், வட்ட பொருளாளர் கயில்வேந்தன் ஆகியோர் முன்னிலையிலும் விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் தற்போது அரசு சார்பில் டிஜிட்டல் முறையில் பயிர் கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என்று விஏஓக்களுக்கு அழுத்தம் தருவதை கண்டித்தும், இப்பணியை மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டும் தோனியில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பை கண்டித்தும் கருப்பு பேஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதில் இவ்வித தொழில்நுட்ப வசதியும் வழங்காமல் டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்தை செயல்படுத்துவதை நிறுத்திட வேண்டும் எனவும், கிராம நிர்வாக அலுவலர்களை மிரட்டுவதை மாவட்ட நிர்வாகவும், மாநில நிர்வாகமும் நிறுத்திட வேண்டும் எனவும் கண்டன கோஷங்களை எழுப்பப்பினர். பின்னர் இறுதியில் வட்ட அமைப்பு செயலாளர் ராஜாராம் நன்றியுரை கூறினார்.
News
கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்!
அடுத்த
" இன்னைக்கு விழுமோ நாளைக்கு விழுமோ " என்ற நிலையில் உள்ள தடுப்பணை:பொதுப்பணித்துறை கண்மாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026