விளாத்திகுளம் அருகே கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ நவநீதகிருஷ்ணனுக்கு 100-க்கணக்கான பக்தர்களின் பால்குடம் ஊர்வலம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி கிராமத்தில் ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் 39-ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு,ஸ்ரீ நவநீதகிருஷ்ணன் கோவிலில் விஸ்வரூப தரிசனம்,மகாசுதர்சன ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து நாகலாபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து கவுண்டன்பட்டி நவநீதகிருஷ்ணன் கோவிலுக்கு  செண்டை மேளத்துடன் 100-க்கணக்கான பக்தர்களின் பால்குடம் ஊர்வலம் வானவேடிக்கையுடன் வெகு விமர்சையாக   நடைபெற்றது. 


அதனைத்தொடர்ந்து நவநீதகிருஷ்ணனுக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, இதில் கவுண்டன்பட்டி நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


நாளை காலை கவுண்டன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நவநீத கிருஷ்ணசாமி கோவிலின் வருஷாபிஷேக விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


விழாவுக்கான ஏற்பாட்டினை கவுண்டன்பட்டி யாதவ சமுதாய மக்கள் மற்றும் சமுதாயத் தலைவர் முருகன் ஆகியோர்  ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்