தூத்துக்குடி
தாளமுத்து நகர் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த தங்க மாரியப்பன் என்பவரின் மகன் சதீஷ்(20)
என்ற இளைஞர், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை
செய்து, இளைஞர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி
வைத்திருப்பதாக தாளமுத்து நகர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது.
இதனை அடுத்து தாளமுத்துநகர் காவல் காவல் நிலைய போலீசார் சதீஷை கைது செய்ய
தாளமுத்துநகர் பகுதி முழுவதும் தேடியுள்ளனர், சதீஷ் தப்பி ஓடியதை அறிந்த தாளமுத்துநகர் காவல்
நிலைய போலீசார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும்
தகவல் அளித்தனர். இதனை அடுத்து குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி மற்றும் உதவி
ஆய்வாளர் முத்துராஜா குளத்தூர்
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் to ஸ்ரீ வைகுண்டபுரம் சாலையில் ஒரே இருசக்கர
வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தி
விசாரணை செய்தபோது. அதில் 3 பேரில் ஒருவர்
தாளமுத்துநகர் பகுதியில் இருந்து தப்பி ஓடிய சதீஷ் என்பவரும், மற்ற இரண்டு பேரும் சதீஷின் கூட்டாளிகளான அதே
பகுதியை சேர்ந்த லோகிதாசன் மகன் சக்தி
இசக்கி (19), மற்றும் பாலசுப்பிரமணியன்
மகன் சுடலை விக்னேஷ் (24) என தெரிய வந்தது, இதனை அடுத்து 3 பேரையும் கைது செய்த குளத்தூர் காவல் நிலைய
போலீசார் அவர்களிடம் இருந்த 350 கிராம் கஞ்சாவை
பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனைக்கு
பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
News
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது.
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இறுதிச்சடங்கில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 2 பெண்கள் உட்பட 3 பேருக்கு வெட்டு!
அடுத்த
குருபெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026