விருதுநகர் மாவட்டம்
திருச்சுழி அருகே உள்ள ஊரணிபட்டி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் (55), இவர் கிறிஸ்துவ தேவாலயத்தில் பாதிரியாராக
இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் 10-05-2024 வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் உள்ள உறவினர் நிகழ்ச்சிக்கு தனது இருசக்கர வாகனத்தில்
சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மழை பெய்ததால், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாலாட்டின்புதூர்
தேசிய நெடுஞ்சாலைஅருகே உள்ள வேப்ப மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக இடி,மின்னல் தாக்கியதில் ராஜமாணிக்கம் சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து நாலாட்டினம் புதூர் காவல் நிலைய போலீசார் ராஜமாணிக்கத்தின் உடலை
கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,
வழக்கு பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Kovilpatti
இடி,மின்னல் தாக்கி தேவாலய பாதிரியார் உயிரிழப்பு.
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ரூ.2 ஆயிரம் திருடிய திருடனை 5 ஆண்டுகளுக்கு பின் கைது செய்த போலீசார்!
அடுத்த
கேரளா கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு?
இதையும் படிக்கலாம்
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பு.
28 Jul 2026
போலி 500 ரூபாய் நோட்டைக் கொடுத்து மோசடி: 3 பேர் கைது!
27 Jun 2026
15 வயது சிறுமியை திருமண ஆசை கூறி பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 17,500/- அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.
19 Jun 2026
பைக்குகள் நேருக்கு நேர் மோதல் - இரண்டு பேர் உயிரிழப்பு.
08 Jun 2026