விளாத்திகுளம் அருகே எட்டப்ப மன்னர் கட்டிய தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லை! ஆங்கிலேயர் ஆட்சி
காலத்தில் தூத்துக்குடி மாவட்டம்
விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் பகுதியை ஆண்ட எட்டப்ப மன்னர், எட்டயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில்,பொதுமக்களின் குடிநீர் வாழ்வாதாரத்திற்காக
படர்ந்தபுளி, ராமனுக்கு
உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோவில்கள், சாலை ஓரங்களில் ஓய்வு மண்டபம் உள்ளிட்டவைகளை கட்டியுள்ளார்,
இதன் ஒரு பகுதியாக
எட்டையாபுரம் அரண்மனைக்கு மேற்கே மற்றும்
வடக்கே எட்டயபுரம் பகுதி மக்களின் நலன் கருதி பெரிய அளவில் இரண்டு தெப்பக்
குளங்களை கட்டினார். இந்த இரண்டு தெப்ப குளங்களுக்கும் மேற்கிலிருந்து காற்றாற்று வெள்ளம் மூலமாக முதலில் மேற்கே உள்ள
தெப்பக்குளம் நிறைந்து பாதாளம் வழியாக கால்வாய் அமைத்து வடக்கே உள்ள தெப்பக்குளம்
நிறைந்து வருடம் மக்கள் பயன்பாட்டிற்கு இருந்துவந்தது.
தற்போது தெப்பக்குளங்கள் தூர்வாரப்படாமலும், பேரூராட்சியின் பராமரிப்பின்றி குப்பையும், செடிகளுமாக
புதர்மண்டியும் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி தெப்பக்குளங்களுக்கு வருகிற
நீர்வரத்து பாதைகளும் அநேக இடங்களில் கழிவுநீர் தற்போது செல்வதாக அப்பகுதி மக்கள்
கூறுகின்றனர். மிகவும் பழைமையான தெப்பக்குளங்களை பேரூராட்சி நிர்வாகம் சரியாக
பராமரிக்காததன் காரணமாக அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமும்
பாதிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும், குளங்களின் படிக்கட்டுகள் மற்றும் உள்பகுதி என முழுவதும் மதுப்பிரியர்களின்
அட்டூழியத்தால் கண்ணாடி பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.
இதனால்
மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி இந்த சிறப்பு வாய்ந்த தெப்பக்குளங்களை தூய்மை
படுத்தி நீர்வரத்து பாதைகளை சரிசெய்து தெப்பக்குளங்குளங்களை மீண்டும் பழையவாறு
மக்கள் பயன்பெற எட்டையபுரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
எட்டையபுரம் பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு
கோரிக்கை வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த சிறப்பு
வாய்ந்த பழைமையான தெப்பக்குளங்களை சரிசெய்ய பேரூராட்சி நிர்வாகம்
முன்வரவில்லையெனில், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்போவதாகவும்
எட்டையபுரம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்தியா
எட்டப்ப மன்னர் கட்டிய தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லை!
Admin
1 நிமிட வாசிப்பு