41நாட்கள் பயணம் கொண்டு நிலவை நெருங்கிய
சந்தரயான்-3 விண்கலம் நேற்று
நிலவில் கால் பதித்து உலகளவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியது, இதனை தொடர்ந்து இந்திய
பிரதமர் நரேந்திர மோடி உட்பட இந்தியா முழுவதும் பொதுமக்கள் மற்றும் சமூக
ஆர்வலர்கள் என உற்சாகமாக சந்திரன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு
பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் கிழக்கு மண்டல
பொதுச்செயலாளர் பழனி முருகன் தலைமையில் பாஜகவினர்,
நிலவை முத்தமிட்ட
சந்திராயன் 3 விக்ரம் லேண்டர் ,இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள்
தெரிவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும்
கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்தியா
சந்தரயான்-3 விண்கலம் வெற்றியடைந்ததை தொடர்ந்து புதூரில் பாஜகவினர் கொண்டாட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு