தூத்துக்குடிக்கு ஆந்திராவில் இருந்து இரண்டு இன்னோவா கார்களின் 280 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தொடர்பாக பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி, பாமக இளைஞர் அணி நிர்வாகி மற்றும் 2 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்பட்டு  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதைத்தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார் மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வெளிமாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் கடந்த 27ஆம் தேதிபுதூர் பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில்  வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது சென்னை என்னுள்ள இரண்டு இன்னோவா சொகுசு கார்களை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்தனர் .இதில் காரில் இருந்த 280 கிலோ கஞ்சா மற்றும் 16 பேரை கைது செய்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சிவசுப்பு தலைமையில் இரண்டு நாட்களாக தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கஞ்சா கடத்தல் தொடர்பாக 1,ஆரோன் 2,இசக்கி ராஜா 3,ஜோசப் 4,பாமக மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா5, சஜன் ரெணி 6,திருமேனி குமரன்  7அருண்குமார் 8,தயாளன் 9,சாத்தான்குளம் ஒன்றிய பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் மணிகண்டன்10, காளீஸ்வரன் 11,விக்னேஸ்வரன்12, திருமேனி 13 சம்பத்குமார் 14,சரவணன் மற்றும் 15,சிபானியா 16,ஸ்ரீமதி ஆகிய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 16 பேரை கைது செய்தனர்.இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் நடுவர் இரண்டில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர் . இந்த கும்பல்  ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை பல நாட்களாக சொகுசு காரில் கடத்தி வந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்  விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது இதற்காக சட்டக் கல்லூரி மாணவி சிபானியா மற்றும் ஸ்ரீமதி ஆகிய இரண்டு பெண்களை இந்த கும்பல் பயன்படுத்தி இருப்பது தெரியவந்தது மேலும் இந்த கும்பருடன் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து அவர்களது செல்போனை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் கஞ்சா கடத்தலில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவி உள்ளிட்டோர் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.