தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் ஆறுமுகம் (35). இவர் கொத்தனாராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகாத நிலையில் இவருக்கும் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் நீண்ட நாட்களாக தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அந்த திருமணமான பெண் சமீப காலமாக அவரது உறவுக்காரரான அதே பகுதியைச்சேர்ந்த திருமணமான டிரைவர் செந்தில்குமார்(39) என்பவருடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைஅறிந்த ஆறுமுகம் அந்தப் பெண்ணை செந்தில்குமாரிடம் பேசக்கூடாது என்று கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி, நேற்று(30.12.2023) காலை விளாத்திகுளம் பஜாரில் வைத்து அந்த பெண்ணை வழிமறித்து ஆறுமுகம் சண்டை போட்டுள்ளார். இதனை அந்த பெண்மணி செந்தில்குமாரிடம், ஆறுமுகம் தன்னை தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார். இதையடுத்து செந்தில்குமார், ஆறுமுகத்தை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் போக்கு உருவாகி உள்ளது. இதனால் கட்டிடத்தொழிலாளியான ஆறுமுகத்தை கொலை செய்ய முடிவு செய்த டிரைவர் செந்தில்குமார், நேற்று காலை முதலே ஆறுமுகத்தை கொலை செய்ய அவரைப் பின்தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு 9.15 மணி அளவில் மது குடிப்பதற்காக மேட்டுப்பட்டி சாலையில் அமைந்துள்ள அரசு மதுபானக்கடையில் மது பாட்டில்கள் வாங்கிவிட்டு அங்குள்ள அபிநயா ஸ்டோர் என்ற பெட்டிக்கடையின் அருகில் தனது நண்பர்களுடன் குடிப்பதற்காக ஆறுமுகம் சென்றுள்ளார்.. இதைத்தெரிந்து கொண்ட டிரைவர் செந்தில்குமார், தன்னுடன் டிரைவர்களாக வேலை செய்து வரும் அவரது சகோதரர் கோவில்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார்(21) மற்றும் நண்பர்களான விளாத்திகுளத்தைச் சேர்ந்த முத்துமாரியப்பன்(24), ஜெயக்குமார்(23) ஆகிய 4 பேரும் TATA ACE வாகனம் மற்றும் பைக்கில் அங்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு மது அருந்திக்கொண்டிருந்த கொத்தனார் ஆறுமுகத்தை, செந்தில்குமாரும், அவருடன் சென்ற 3 டிரைவர்களும் இரும்பு கம்பியால் தலையில் அடித்து அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு தரதரவென இழுத்துச்சென்று தலை மற்றும் கண் பகுதியில் கத்தியால் குத்தி உள்ளனர். அப்போது அங்கிருந்த ஆறுமுகத்தின் நண்பர்களையும் கத்தியை காட்டி கிட்ட வந்தால் குத்தி விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். பின்னர் இரத்த வெள்ளத்தில் ஆறுமுகம் சரிந்து விழுந்தவுடன் கொலை செய்த டிரைவர் செந்தில்குமார் மற்றும் செல்வகுமார், முத்துமாரியம்மன், ஜெயக்குமார் ஆகியோர் அங்கிருந்து வானங்களை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பிச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விளாத்திகுளம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விளாத்திகுளம் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் அங்கிருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த கொத்தனார் ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிகளைத் தீவிரமாக தேடி வந்த நிலையில், தற்போது கொலை செய்த செல்வகுமார், முத்து மாரியப்பன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய 3 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமறைவாகியுள்ள முக்கிய குற்றவாளியான செந்தில்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றம்
கள்ளக்காதலர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் படுகொலை.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டையன்!
அடுத்த
13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி : பேரூராட்சி அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம்!
இதையும் படிக்கலாம்
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026
மகாலட்சுமியை மனதார நினைத்து 108 மந்திரங்களை கூறி வழிபாடு நடத்திய ஏராளமான பெண்கள்!
18 Sep 2026