தூத்துக்குடி மாலத்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தருவைகுளம் மீன் பிடி கிராமத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை மாலத்தீவு கடலோர காவல் படை கைது செய்துள்ளது மீனவர்களை மீட்க கோரிக்கை. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள தருவைகுளம் கடற்கரை கிராமத்தில் இருந்து கடந்த ஒன்றாம் தேதி மைக்கேல் பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் பரலோக திரவியம் ,அந்தோணி கிறிஸ்டோபர், உதயகுமார் ,மைக்கேல் ராஜா ,மாதேஷ் குமார் ,ஆதிநாராயணன், மணி, சக்தி செல்வராஜ் விக்னேஷ், உள்ளிட்ட 12 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்றுள்ளனர். இவர்கள் ஆழ் கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு திரும்பிக் கொண்டிருக்கும்போது கடந்த 23ஆம் தேதிமாலத்தீவு கடல் பகுதி வழியாக வரும்போது அங்கே வந்த மாலத்தீவு கடலோர காவல் படையினர் அத்துமீறி மாலத்தீவு கடல் பகுதியில் உள்ளே நுழைந்துள்ளதாக கூறி 12 மீனவர்கள் கைது செய்தவுடன் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மாலத்தீவு கடலோர காவல் படையினர் மூலம் மீனவர்கள் நேற்று இரவு தருவைகுளம் மீனவ கிராமத்திற்கு தகவல் அளித்தனர் இதை தொடர்ந்து மாலத்தீவு கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மத்திய மாநில அரசுகள் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விசைப்படகு உரிமையாளர் சங்கம் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக கடலோர காவல் நிலைய போலீசார் மற்றும் தருவைகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகம்
தருவைகுளம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்களை மாலத்தீவு கடலோர காவல் படை கைது.
Admin
1 நிமிட வாசிப்பு