விளாத்திகுளம் அருகே குளத்தூர் ராமச்சந்திராபுரம் கிராமத்தில்  வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர்- ராமச்சந்திராபுரம்   கிராமத்தை சேர்ந்த  சண்முகமணி  என்பவரின் மகன் சந்தனராஜ் (30), சந்தானராஜ் லாரி ஓட்டுனராக வேலை செய்து வந்துள்ளார், சுந்தரராஜுக்கு 30 வயது ஆகியும் தனக்குத் திருமணம் ஆகவில்லை என்று, சந்தன ராஜன் தாய் ஆவுடையம்மாளிடம் குடித்துவிட்டு   சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் குடித்துவிட்டு  தாய் ஆவுடையம்மாளிடம் சண்டை போட்டுவிட்டு   வீட்டுக்குள் சென்று வீட்டில்  உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை எடுத்து தகவல் அறிந்த குளத்தூர் காவல் நிலைய போலீசார். சந்தன ராஜின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு  ஆய்வுக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.