விளாத்திகுளத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் "வாக்காளர் விழிப்புணர்வு பேரணி" : நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு! தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், விளாத்திகுளத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்த இப்பேரணியானது அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி எட்டையபுரம் ரோடு, பேருந்து நிலையம், மதுரை ரோடு, காய்கறி மார்க்கெட் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.
மேலும் இப்பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்டவை பற்றி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியவாறு பள்ளி மாணவ-மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி தலைமை ஆசிரியர் தவசுமுத்து, தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் உட்பட வருவாய் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், காவல் துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விதவை உதவி தொகை வழங்க அமைச்சரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த மூதாட்டி!
அடுத்த
நுண்கதிர்வீச்சு மையத்தை எம்எல்ஏ மார்க்கண்டையன் திறந்து வைத்தார்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026