தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் "சித்திரைப் பெருந்திருவிழா" நாளை (ஏப்ரல் 12-ம் தேதி) காலை 9.00-10.15 மணிக்குள் திருக்கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 11 நாட்கள் நடைபெறவிருக்கும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா சிறப்பாக நடைபெறவுள்ளது. அதேபோன்று திருவிழாவில் முக்கிய நிகழ்வான சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் 9-ம் திருநாளான ஏப்ரல் 20-ம் தேதி இரவு 7.00 - 8.00 மணிக்குள் நடைபெறுகின்றது. அதேபோல் திருத்தேரோட்டம் 10-ம் திருநாளான வருகின்ற ஏப்ரல் 21-ம் தேதி மாலை 3.30 மணிக்கு கோலாகலமாக நடைபெறவிருக்கின்றது. இவண்: திருக்கோவில் நிர்வாகம்...
Vilathikulam
நாளை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திருக்கொடியேற்றம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து MLA மார்க்கண்டயன் வாக்கு சேகரித்தார்.
அடுத்த
உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.65 ஆயிரம் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைப்பு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026