எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேச்சு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மார்கண்டேயன் வழக்கு விசாரணை ஜாமின் மனு ரத்து போலீசார் விசாரணை கேட்ட மனு என இரண்டு மனுக்களையும் ரத்து செய்த நீதிபதி தொடர்ந்து மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு.
ஹாப்பியா இருங்க எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் திமுக தொண்டர்களிடம் மார்க்கண்டேயன் எம். எல்.ஏ பேச்சு!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து கடந்த 18-ம் தேதி கோவில்பட்டியில் நடைபெற்ற நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் அவதூறாக பேசியதாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மார்கண்டேயன் மீது 3-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 20-ம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார் இந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்க கோரி அவரது வழக்கறிஞர் ஏற்கனவே தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுமதி-யிடம் மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது இதற்காக பாளையங்கோட்டை சிறையில் இருந்து மார்கண்டேயன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த நிலையில் போலீசார் தரப்பில் மார்க்கண்டேயனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க இரண்டு நாள் போலீஸ் கஸ்டடி கேட்டு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை மற்றும் மார்க்கண்டேயன் தரப்பில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையும் இன்று மதியம் மூன்று மணிக்கு நடக்க உள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணையில் டி எஸ் பி கண்ணன், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜானகி, சிறப்பு அரசு வழக்கறிஞர் ஸ்ரீதேவி ஆகியோர் ஆஜராகின்றனர்.
இந்த வழ்க்கு விசாரணை தொடங்கும் போது சட்டமன்ற உறுப்பினர் தரப்பில் அவரது உடல் நலம் கருதி ஜாமின் வழங்குமாறு வாதாடினர்.
போலீசார் தரப்பில் கடந்த 18-ஆம் தேதி கோவில்பட்டி-யில் நன்றி தெரிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆர் எஸ் பாரதி கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டதனால் அவர்கள் தூண்டுதலின் பேரில் மார்க்கண்டேயன் எம் எல் ஏ தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசினாரா என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக இரண்டு நாள் போலீஸ் காவல் கேட்பதாக போலீஸ் தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுமதி இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்ததால் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மார்கண்டேயன் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது வாகனத்தை சுற்றி இருந்த திமுகவினரிடம் அவர் கூறுகையில், ஹாப்பியா இருங்க எத்தனை நாள் நாட்கள் உள்ளே இருக்கிறானோ அவ்வளவு சீக்கிரம் திமுக ஆட்சிக்கு வரும் திமுக தொண்டர்களிடம் மார்க்கண்டேயன் எம். எல்.ஏ கூறினார்.