தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்கண்டயேன்! : மதிமுகவில் தொடங்கி பாளையங்கோட்டை சிறைச்சாலை வரை...




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த வராதராஜன் என்பவரின் மகன் மார்கண்டயேன், விவசாய குடும்பத்தை சேர்ந்த மார்கண்டயேன் (52),  சட்டக்கல்லூரி படித்து பின்பு ராமச்சந்திராபுரம் கிராமத்தில் உதயம் நடன குழு என்று கலைக்குழு ஆரம்பித்து அதற்கு பொறுப்பாளராக இருந்து வந்துள்ளார்.




பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அரசியல் பேச்சின் ஈர்ப்பின் காரணமாக, தன்னை1998-ல் மதிமுகவில் இணைத்துக் கொண்டார், அதனைத்தொடர்ந்து மதிமுக கழக மேடை பேச்சாளராக தன்னை காட்டிக்கொண்டு அப்போதிலிருந்து தன்னை ஒரு பேச்சாளராக மாற்றிக்கொண்டு, மதிமுக மற்றும் மதிமுகவின் கூட்டணி கட்சிகள் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மேடைப் பேச்சாளராக வலம் வந்தார்.




பின்னர் 2001-ம் ஆண்டில்  கோவில்பட்டியை சேர்ந்த ராமானுஜம் கணேசன் என்பவரின் அறிமுகம் கிடைத்து, தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார், பின்னர் ஊராட்சி கவுன்சிலர், அதனைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் என அரசியல் வட்டாரத்தில் பெரும் புள்ளியாக வலம் வந்தார்.





அதனைத்தொடர்ந்து அப்போதைய அமைச்சர் கோகில இந்திரா மற்றும் சின்னத்துரை ஆகியோரின் சிபாரிசின் மூலம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 2011-ம் ஆண்டுக்கான சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட விருப்பமான அளித்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி வெற்றி பெற்று முதல் முறையாக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்,



பின்னர் 2011-ம் ஆண்டு மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற மணல் குவாரியில் மாமூல் கேட்டபோது அங்கிருந்த மணல் மாஃபியாக்கள், எம்.எல்.ஏ என்று கூட பாராமல் மார்கண்டயேனை அடித்து விரட்ட முயன்றுள்ளனர், அதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ மார்கண்டயேன் மாசார்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மணல் மாஃபியாக்கள் மீது 307-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



அதனைத்தொடர்ந்து 2011-ம் ஆண்டு காவல் நிலையத்தில் வேல்ச்சாமி என்ற உதவி ஆய்வாளரை சட்டையை பிடித்து கொலை மிரட்டல் கொடுத்த புகாரின் பேரில்,அப்போது இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திர நாயர், எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார், அதனைத் தொடர்ந்து காடல்குடி காவல் நிலையத்தில் மார்கண்டயேன் மீது 307-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.



 2011-ம் ஆண்டு  நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா குறித்து அவதூறாக பேசிய திமுகவினரை கண்டித்துப்பேசுவதாக நினைத்து அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியை  மிகவும் தரகுறைவாகவும் “ கருணாநிதி ஒரு திருடன்” என பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார், அதனைத் தொடர்ந்து அப்போது சட்டமன்ற அவை குறிப்பில் இருந்து அந்த  சர்ச்சை பேச்சு நீக்கப்பட்டது.



பின்னர் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது பல்வேறு சர்ச்சைக்குரிய புகார்கள் வந்த நிலையில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஜெயலலிதா மறுத்துவிட்டார். 




அதனைத் தொடர்ந்து தமிழகம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீக்கும் மார்க்கண்டயேனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதல் காரணமாக, அதிமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் விலகினார்.




பின்னர் 2019-ம் ஆண்டு விளாத்திகுளம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து பணத்திற்கு பதிலாக டோக்கன்களை வழங்கினார், அந்த டோக்கனில் உள்ள QR code ஸ்கேன் செய்தால் அது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு தேங்காய் எண்ணெய் கம்பெனிக்கு சென்றதாக கூறப்படுகிறது, அதனைத்தொடர்ந்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு சுயேட்சையாக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் 27 ஆயிரம் வாக்கு மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.




பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவதற்கு தனது மகன் மூலம் 2020-ம் ஆண்டு  ஆர். எஸ்.எஸ் கட்சியினருடன் மகனை அனுப்பி விளாத்திகுளம் வட்டாட்சியரிடம் கோரண நிதி வழங்கினார். பாரதியார் ஜனதா கட்சியில் முழு அங்கீகாரம் கிடைக்காத நிலையில், முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மற்றும் கனிமொழி மூலமாக தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டு 2020 முதல் 2021-ம் ஆண்டு வரை  தீவிர திமுக கட்சிப்பணியாற்றி மு.க.ஸ்டாலின் மனதில் இடம் பிடித்து 2021-ம் ஆண்டு விளாத்திகுளம் தொகுதி சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு,அமோக வெற்றி பெற்றார்.






அதனைத்தொடர்ந்து 2023-ம் ஆண்டு சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பெரியசாமிபுரம் கிராமத்தில் திமுக முன்னாள் பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகழனின் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டயேன், முன்னாள் தமிழக முதல்வர் "ஜெயலலிதாவை கொன்றது இந்திய பிரதமர் மோடி" தான் எனவும் இந்த இடத்தில் நான் இதை பகிரங்கமாக சொல்லுவேன் என்றும் மீண்டும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.



இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியினர் விளாத்திகுளம் சூரங்குடி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த காவல் நிலையத்திலும் எம்.எல.ஏ மார்க்கண்டயேன் மீது தற்போது வரை வழக்குப்பதிவு செய்யவில்லை.



அதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புங்கவர்நத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் GRT POWER GREAT நிறுவனத்தினர் தனக்கு மாமூல் தரவில்லை என்று அந்த தொழிற்சாலைக்கு சென்று நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர் உதவி மேலாளர்களை ஆபாச வார்த்தைகளால் வசைப்பாடி கொலை மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.





அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு திருப்பரங்குன்ற தீபம் வழக்கு தொடர்பாக நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து, 07-12-2026 அன்று மதுரை விமான நிலையத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் அக்ஷய், நீதிபதி சாமிநாதன் விமான நிலையத்திற்கு வருகை தந்த போது நீதிபதி சுவாமிநாதன் ஒழிக என்று கோஷமிட்டு போலீசார் அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது, அதனைதொடர்ந்து அன்று மாலையே எட்டையாபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் வைத்து, நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக திமுக எம்.எல். ஏ மார்க்கண்டயேனும், அவரது மகன் அக்ஷயம் சேர்ந்து நீதிபதி சுவாமிநாதனுக்கும் அவர் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தங்களது கருத்துக்களையும் கண்டனத்தையும் பதிவு செய்தனர். இந்நிலையில் நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பையும் அவரையும் இழிவு படுத்திய மார்க்கண்டேயன் மற்றும் அவரது மகன் ஆகாஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி விளாத்திகுளம் அருகே உள்ள தங்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி பார்த்திபன் என்பவர் எட்டையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அந்தப்புகாரை அலட்சியப்படுத்தி எட்டையபுரம் காவல் நிலையத்தை கண்டித்து, பார்த்திபன் கோவில்பட்டி JM -2 நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், அந்த வழக்கில் நீதிபதிகள் ஒரு மாதத்திற்குள் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் மற்றும் அவரது மகன் அக்ஸை மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று  உத்தரவிட்டிருந்தார்.



ஆனால் இதுவரை எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது எந்த விசாரணையும் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 18-07-2026 கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன், கரூரில் தமிழக முதலமைச்சர் விஜய் சபாநாயகரை வைத்து கேட்டை  இழுத்து மூடி சட்டமன்ற உறுப்பினர்களை வெளியே செல்ல முடியாமல் நிலை ஏற்படுத்தி விடுவேன் என்று கூறியதை சுட்டிக்காட்டி, நீ சட்டமன்ற கதவை பூட்டினால் உனது எலும்பை உடைத்து விடுவேன் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், தமிழக வெற்றி கழக கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அளித்த புகாரின் பேரில் 20-07-2026 திங்கள்கிழமை காலை தனது வீட்டில் இருந்த  சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனை போலீசார் கைது செய்தனர், மார்கண்டயேன் கைது செய்ததை கண்டித்து வாகனம் முன்பு அமர்ந்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



பின்னர் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்ற போலீசார்,14 மணி நேர விசாரணைக்கு பின்பு  தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, 15 நாள் நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.



தற்போது எம் எல் ஏ மார்கண்டயேனை   திமுகவினர் ஒருபுறம் ஜாமீனில் எடுக்கவும், காவல்துறையினர் விசாரணைக்கு  கஸ்டடி எடுக்கவும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது  குறிப்பிடத்தக்கதாகும்.