எட்டயபுரம் அருகே அரசு பேருந்து மீது வேன் மோதல் - பள்ளத்திற்குள் பாய்ந்த அரசு பேருந்து - அரசு பேருந்து டிரைவர் உள்பட 10 பேர் காயம்.
அரசு பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து 28 பயணிகளை ஏற்றுக்கொண்டு அரசு பேருந்து ஒன்று தேனி மாவட்டம் குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. தூத்துக்குடி - மதுரை நெடுஞ்சாலையில் எட்டையாபுரம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது, விளாத்திகுளத்தில் இருந்து எட்டையாபுரம் நோக்கி சென்ற வேன் ஒன்று பேருந்து வருவது தெரியாமல் சாலையை கடக்க முயன்றுள்ளது,
இதனை பார்த்த அரசு பேருந்து டிரைவர் தெய்வநாயகம் வேன் மீது மோதாமல் இருக்க, பேருந்து திருப்ப முயன்றபோது, வேனின் முன் பகுதி அரசு பேருந்து மீது உரசி மோதியதில், அரசு பேருந்து நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் இருந்த நீரோடை தடுப்புச்சுவரில் ஏறி அருகில் உள்ள பள்ளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
மேலும் வேன் பேருந்தின் மீது உரசியதல் வேனின் முன்பக்க கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்து சேதமடைந்து. இதில் பேருந்து ஓட்டுனர் தெய்வநாயகம் மற்றும் பயணிகள் 6 பேருக்கு காயம் ஏற்பபட்டது. அதே போல வேனில் வந்த மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்கள் எட்டையாபுரம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன்மீது பேருந்து மோதி இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும். வேன் மீது மோதமால் இருக்க அரசு பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது . இந்த விபத்து குறித்து எட்டையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.